பெண் எஸ்பி பாலியல் புகார் வழக்கு, நீதி மன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் அதிரடி
கடந்த பிப்ரவரி 22ம் தேதி, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள் ளிட்ட மாவட்டங்களில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, முதல்வர் பாதுகாப்பு அதிகாரி பணியில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஈடுபட்டி ருந்தார். அவர், பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒரு வரை, காரில் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடு பட்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக, சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக் கப்பட்ட பெண் எஸ்.பி., டிஜிபி, மற்றும் தலைமை செயலாளரிடம் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. வேலியே பயிரை மேயும் கதையாக இருந்தது. இதன்பின், சென்னைநீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது
இதற்கிடையே, அரசு இந்த இந்த வழக்கை சிபிசிஐ டிக்குமாற்றியது. பின்னர், சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந் தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ். பி. கண்ண ன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இரு வரும் சஸ்பெண்ட் செய் யப்பட்டனர்.
பாலியல் புகார் தொடர்பாக 80க்கும் உயர்மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட் டது. இந்நிலையில், பாதிக் கப்பட்ட பெண் எஸ்பி, கடந்த ஏப்ரல் 23ம்தேதி, விழுப்புரம் 2வது குற்றவி யல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி மணிநே ரத்துக்கு மேலாக ரகசிய வாக்குமூலமும் அளிவித்து விட்டுச்சென்றார்.
தொடர்ந்து, இது தொ டர்பான வழக்கை விழுப் புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமை யிலான போலீசார் விசாரணை நடத்திவந்த நிலை யில், நேற்று விழுப்புரம் கோர்ட்டில் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய்தனர்.
தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி கோபி நாதன் முன்னிலையில், ஆஜரான சிபிசிஐடி கூடு தல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார், இவ்வழக்கு தொடர்பாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 400 பக் கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu