உள்ளாட்சி தேர்தல்- விழுப்புரம் மாவட்டத்தில் 150 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 24 ஆயிரம் வேட்புமனுக்களில் 150 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

இதில் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 241 வேட்பு மனுக்களில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 239 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் 293 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 2090 வேட்பு மனுக்களில் 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 2061 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

688 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 4138 வேட்பு மனுக்களில் 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4099 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 17,531 வேட்பு மனுக்களில் 80 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 17,451 வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட 24 ஆயிரம் பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 150 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 23,850 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!