விழுப்புரம் தொகுதியில் திமுக முன்னிலை

விழுப்புரம் தொகுதியில் திமுக முன்னிலை
X

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது, இங்கு இரு தபால் வாக்குகளில் வாக்கு உறுதிக்கான டிக் மார்க் அதிமுக வேட்பாளரின் படத்தின் மீது இருந்தாக தெரிகிறது.

இதற்கு திமுக சார்பில் அந்த தபால் வாக்கை ஏற்றுகொள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர், அதிமுக ஏற்று கொள்ளவேண்டும் என கூறினர், இதனால் வாக்கு எண்ணும் இடத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது, உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த கோட்ட தேர்தல் அலுவலர் ஹரிதாஸ் தபால் வாக்குகள் பதிவு கட்டத்திற்கு உள் இருப்பதால் வாக்கு ஏற்றுகொள்ள படும் என தெரிவித்தார், இதனையடுத்து மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி விழுப்புரம் தொகுதியில் திமுக முன்னிலை வகுத்து வருகிறது.

Next Story
ai and business intelligence