நியாய விலை கடை கேட்டு தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

நியாய விலை கடை கேட்டு தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
X

பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

நியாய விலை கடை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி மாதுடையார்குளம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதுடையார் குளம் கிராமத்தில் மட்டும் சுமார் 500 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த கிராமத்திற்கு என்று தனியான நியாய விலை கடை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நியாய விலை கடை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி நேற்று முன்தினம் கடை செயல்பாட்டுக்கு வருவதாக இருந்தது.

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக நியாய விலை கடை செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி மாதுடையார்குளம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போதிலும் அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் இதுவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சேரன்மகாதேவி வட்டாட்சியர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில தினங்களில் நியாயவிலைக்கடை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக உறுதி உறுதியளித்தார்.எனினும் நியாய விலைக் கடையின் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளும் மக்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil