தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர் கொடி

தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர் கொடி
X
தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடியை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று வழங்குகிறார்.

தமிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில காவல்துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான். தமிழக காவல்துறைக்கு கௌரவமிக்க குடியரசு தலைவரின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.


விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்க, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குடியரசு தலைவரின் கொடியை தமிழக காவல்துறைக்கு வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!