கொரோனா: தி.க. தலைவர் வீரமணி, மனைவியுடன் மருத்துவமனையில் அனுமதி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அவரது மனைவி மோகனா இருவரும், கொரோனா பெருந்தொற்றால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் முழுமையாக அதன் தாக்கம் கட்டுக்குள் இல்லை. இதனால், கொரோனா பாதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில் தி.க. தலைவர் கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி