/* */

வேலூர் மாநகர மேம்பாலங்களில் ஓவியங்கள்: கலெக்டர் உத்தரவு

வேலூர் மாநகரில் 6 மேம்பாலங்களில் மாவட்டத்தின் பெருமை அரசின் திட்டங்களை பறைசாற்றும் ஓவியங்கள் வரையப்படுகிறது

HIGHLIGHTS

வேலூர் மாநகர மேம்பாலங்களில் ஓவியங்கள்: கலெக்டர் உத்தரவு
X

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இடையிலான முக்கிய நகரமாக வேலூர் நகரம் இருந்து வருகிறது. வேலூர் மாநகரின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் அலுமேலுமங்காபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், கிரீன் சர்க்கிள், ரெயில்வே மேம்பாலம், மற்றும் சிறிய மேம்பாலம், சேண்பாக்கம் மற்றும் கொணவட்டம் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த மேம்பால பக்கவாட்டு சுவர்களில் எப்போதும் விளம்பர போஸ்டர்கள், அரசியல் கட்சியினரின் பிறந்த நாள், நினைவு நாள் போஸ்டரை ஒட்டி வருகின்றனர். அவ்வப்போது போஸ்டர்களை அகற்றினாலும் மீண்டும் அங்கு போஸ்டர் ஒட்டுவது நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாற்று தீர்வாக 6 முக்கிய மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அரசு துறைகளின் அதிகாரிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பெயின்ட் நிறுவனத்துடன் இணைந்து ஓவியங்களாக வரைய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கலெக்டரின் புதிய முயற்சியால் வேலூர் நகரம் புதுப்பொலிவு பெறும். மாவட்டத்தின் பெருமையையும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையவும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இந்த ஓவியங்கள் வரைய வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

இதற்கான கருத்துருக்களையும் புகைப் படங்களையும் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் பணிகள் தொடங்கும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 6 March 2022 12:33 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  2. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  3. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  4. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  7. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  8. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. அரசியல்
    நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல்...