வேலூர் நேதாஜி மார்க்கெட் 78 நாட்களுக்கு பிறகு திறப்பு

வேலூர் நேதாஜி மார்க்கெட்
வேலூர் நேதாஜி மார்க் கெட் 78 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. இங்கு வழக்கம்போல் சில்லரை காய்கறி விற்பனை செய்யப்பட்டது. மேலும் இங்குள்ள மளிகை கடை ளும் திறக்கப்பட்டு வியா பாரம் நடந்தது . வேலூர் மத்திய பகுதியில் அமைந்துள்ளது நேதாஜி மார்க்கெட். இங்கு காய்கறிகள், பழங்கள் மொத்த வியாபாரமாகவும், சில்லரை வியாபாரமாகவும் நடைபெறும். இதனால் அதிகாலை 3 மணி முதல் இங்கு ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் பொதுமக்கள் திரள்வதால் அதிகாலை நேரத்திலேயே பெரும் பரபரப்பாக இருக்கும். இதுதவிர மளிகை கடைகள், அரிசி கடைகள், எண்ணெய் கடைகள், பூக்கடைகள் உள்பட பல்வேறு கடைகளும் உள்ளன . இதனால் எப்போதும் பொது மக்கள் கூட்டத்தால் இப்பகுதி நிரம்பி வழியும் .
கொரோனா 2 வது அலை வேகமெடுத்த நிலையில் இப்பகுதியில் சமூக இடைவெளியின்றி குவியும் வியாபாரிகள், பொதுமக்களால் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் இங்கு இயங்கிவந்தமொத்த காய்கறி வியாபாரம் மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது சில்லரை காய்கறி வியாபாரம் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கும் , பூ மார்க்கெட் ஊரீசு பள்ளி மைதானத்திலும் இயங்கி வந்தது . இதையடுத்து நேதாஜி மாரக் கெட்டில் கடந்த ஏப்ரல் 20 ம்தேதி முதல் கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து மீண்டும் நேதாஜி மார்க்கெட்திறக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கைவைத்தனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில், நேதாஜி மார்க்கெட்டில் சில்லரை காய்கறி, மளிகை, பாத்திரக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது .
மேலும் ஊரிசு பள்ளி மைதானத்தில் இயங்கி வந்தபூமார்க்கெட் டவுன் ஹால் வளாகத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 78 நாட்களுக்கு பிறகு இன்று காலை வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் சில்லரை காய்கறி வியாபாரம் களை கட்டியது. இதேபோல் மளிகை கடைகள், பாத்திரக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந் திருக்க வேண்டும் . சமூக இடைவெளியை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. வேலூர் மாங்காய் மண்டி அருகே இயங்கி வரும் மொத்த காய்கறி கடைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அதே இடத்தில் இயங்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu