காட்டுத்தீயில் பல ஏக்கர் மரங்கள் நாசம்

காட்டுத்தீயில்  பல ஏக்கர் மரங்கள் நாசம்
X
சமூக விரோதிகள் செயலால் ஏற்பட்ட காட்டுத்தீயில் எரிந்து நாசமான பல ஏக்கர் மரங்கள்.

கோடை காலம் தொடங்கிய நிலையில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை இந்தாண்டு அதிகபட்சமாக 97 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வேலூர் அடுத்த செங்கல்நத்தம் மலை பகுதியில் சமூக விரோதிகள் சதிசெயலால் இன்று மாலை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

சிறியதாக மலையின் ஒரு மூலையில் ஏற்பட்ட காட்டுத்தீ, காற்று பலமாக வீசியதன் காரணமாக மளமளவென மலை முழுவதும் பரவியது. காட்டுத்தீ குறித்து வேலூர் சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ அதிகமாக பரவியதால் அணைக்க முடியவில்லை. இதனால் பல ஏக்கர் பரப்பளவிற்கு தீ பரவி மரங்கள், செடிகள், பறவைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

மேலும் செங்கல்நத்தம் மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பெரும் புகை மூட்டம் ஏற்பட்டு அதில் இருந்து வெளியான சாம்பல் வேலூர் மாநகர் முழுவதும் பரவி வருகிறது. தற்போது வரை மலை தொடர்ந்து எரிந்து வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil