வேலூர் மாவட்டத்தில் 95 லட்சம் பறிமுதல் : 11 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் 95 லட்சம் பறிமுதல் : 11 பேர் கைது
X

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 95 லட்சத்து 30 ஆயிரத்து 603 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேலூர் மாவட்டத்தில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், தேர்தல் மேற்பார்வையாளர்கள் என 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் 60 இலட்சத்து 87 ஆயிரத்து 581 ரூபாய் ரொக்க பணமும், 15 லட்சத்து 69 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலான பொருட்களும், 11,73,171 மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் என மொத்தம் 95,30,603 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 மொபைல், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்