பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்திய வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா

பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்திய வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா
X

பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தும் வேலூர் சரக டிஐஜி 

தொரப்பாடி அரசினர் உயர்நிலை பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திய வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா

வேலூர் மாவட்டம், தொரப்பாடி அரசினர் உயர்நிலை பள்ளியில் வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் ஆனி விஜயா பள்ளி மாணவிகளுடன் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்

அப்போது பேசிய அவர், பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை அது முழு சமுதாய முன்னேற்றத்தை மேம்படுத்தும் எனவும், எந்த சூழ்நிலையிலும் பெண்கள் கல்வியை கைவிடாமல் தொடர வேண்டும் எனவும். மாணவியர்களின் வருங்கால வாழ்க்கையில் வெற்றி படிக்கட்டுகளை அடைய உத்வேகம் ஊட்டும் வகையிலான அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!