பல்நோக்கு அரங்கமாக மாறும் வேலூர் அண்ணா கலையரங்கம்
வேலூர் அண்ணா கலையரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்
வேலூர் மாநகரின் முக்கிய சாலையாக உள்ள அண்ணா சாலையில் கடந்த 1969-ம் ஆண்டு சிறுவர் அரங்கம் திறக்கப்பட்டது. பின்னர், 22,152 சதுரடி பரப்பளவு கொண்ட கட்டிடத்துடன் அண்ணா கலையரங்கம் என பெயர் மாற்றப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் 1971-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக இருந்த அண்ணா கலையரங்கம் மேம்படுத்தப்பட்டு 1978-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் தினசரி 3 காட்சிகள் வீதம் முழு நீள திரைப்படங்கள் வெளியிட தொடங்கப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு அரசு விழாக்கள் அண்ணா கலையரங்கில் நடத்தப்பட்டு அதன் மூலமும் வருவாய் கிடைத்தது. ஆனால், போதிய அளவில் வருவாய் இல்லை என்ற காரணத்தை கூறி கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா கலையரங்கம் மூடியே உள்ளது.
பரப்பான சாலையில் இயங்கிய அண்ணா கலையரங்கம் இன்று அடையாளம் இழந்து காணப்படுகிறது. சகல வசதிகளுடன் இருக்கும் அண்ணா கலையரங்கை மீண்டும் புதுப்பித்தால் திரைப்படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் வசதியாக இருக்கும் என பலரும் வலியுறுத்திய நிலையில், தற்போது அண்ணா கலை அரங்கத்தினை புதுப்பித்து பல்நோக்கு அரங்கமாகவும், வணிக வளாகம், சுற்றுப்புற அங்காடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு துணை செயலாளர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu