வேலூர் மாநகராட்சி தேர்தல்: திமுக சார்பில் திருநங்கை வேட்புமனு தாக்கல்

வேலூர் மாநகராட்சி தேர்தல்: திமுக சார்பில் திருநங்கை வேட்புமனு தாக்கல்
X

திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா, வேலூர் மாநகராட்சியின் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சுதாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேலூர் மாநகராட்சியில் முதல்முறையாக திமுக சார்பில் திருநங்கை கங்கா இன்று வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்டத்தில் இன்று பாமக அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் 37 வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா, தேர்தல் நடத்தும் அலுவலர் வேலூர் மாநகராட்சியின் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சுதாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதேபோல் 38. வது வார்டு - சுயேட்சை வேட்பாளர் ஜோதிலட்சுமி, 47 வது வார்டுக்கு பாமாக வேட்பாளர் தாமு, 39வது வார்டுக்கு பாமக வேட்பாளர் பாலாஜி உள்பட பலர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக சார்பில் வேட்பாளராக திருநங்கை கங்கா அறிவிக்கப்பட்டு இன்று அவர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முதல்முறையாக திருநங்கை ஒருவர் வேலூர் மாநகராட்சியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!