வேலூரில் திமுக வேட்பாளராக திருநங்கை போட்டி

வேலூரில் திமுக வேட்பாளராக திருநங்கை போட்டி
X
வேலூர் மாநகராட்சி தேர்தலில் 37-வது வார்டில் தி.மு.க.சார்பில் வேட்பாளராக திருநங்கை நிறுத்தப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். முக்கிய கட்சிகளும் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வேலூர் மாநகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் திருநங்கை ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

வேலூர் மாநகராட்சியில் 37வது வார்டில் திமுக வேட்பாளராக வேலூர் ஓல்டு டவுன் உத்திரமாதா கோவில் பின்புறமுள்ள பகுதியை சேர்ந்த கங்கா என்ற திருநங்கை போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பாக போட்டியிட கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தநிலையில் திருநங்கை ஒருவருக்கு சீட் வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!