வேலூர் கிரீன் சர்க்கிளில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம்

வேலூர் கிரீன் சர்க்கிளில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம்
X

வேலூர் கிரீன் சர்க்கிள்

வேலூர் கிரீன்சர்க்கிளில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கியது.

வேலூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கிரீன்சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார். அதையடுத்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர்.

அதன்படி, கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வரும் வாகன எண்ணிக்கையை குறைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை மாற்றம் செய்தனர்.

அதன்படி வேலூரில் இருந்து கிரீன்சர்க்கிள் வழியாக செல்லும் வாகனங்கள் (பஸ்கள், லாரிகள் தவிர) நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் இருந்து இடதுபுறம் பெட்ரோல் பங்க் வழியாக சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்படுகிறது.

இருசக்கர வாகனங்கள், கார் முதலிய வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு சென்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை வழியாக சாலையை கடந்து சர்வீஸ் சாலையோரம் (சேண்பாக்கம்-வேலூர்) வழியாக கிரீன்சர்க்கிள் செல்லலாம். அதே வேளையில் காட்பாடிக்கு செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக சென்று சுரங்கபாதையை கடந்து புதிய பஸ் நிலைய பின்புறம் சாலை வழியாக காட்பாடிக்கு செல்கிறது.

இந்த மாற்றம் சோதனை ஓட்டமாக மாலை 3 மணி முதல் 7 மணி வரை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!