வேலூர் பொய்கை சந்தைக்கு விற்பனைக்கு வந்த மாடுகளை திருப்பி அனுப்பிய போலீசார்

வேலூர் பொய்கை சந்தைக்கு விற்பனைக்கு வந்த மாடுகளை திருப்பி அனுப்பிய போலீசார்
X

மாட்டு சந்தை மூடப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

வேலூர் பொய்கை சந்தைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வந்த மாடுகளை போலீசார் திருப்பி அனுப்பியதால் வியாபாரிகள் ஏமாற்றம்.

வேலூர் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை மிகவும் பிரபலமானதாகும் . ஒவ் வொரு வாரமும் நடைபெறும் பொய்கை மாட்டுச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா , ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் .

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொய்கை கிராமத்தில் நடைபெறும். மாட்டுசந்தைக்கு பொதுமக்கள் நலன் கருதி ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது என்றும், . அதன்படி 17 ம்தேதி ( இன்று ) பொய்கை சந்தை நடைபெறாது. இந்த தடையை மீறி பொய்கை சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்வோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொய்கை மாட்டு சந்தைக்கு இன்று காலை பொய்கை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளை வழக்கம் போல் விற்பனை செய்ய அழைத்து வந்தனர். அவர்களை அங்கிருந்த போலீசார், சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி திருப்பி அனுப்பினர் . இதனால் விவசாயி கள், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

ஒரு சிலர் தேசிய நெடுஞ்சாலையோரம் கால்நடைகளை விற்பனை செய்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர் .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!