அமிர்தி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

அமிர்தி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்
X
அமிர்தி உயிரியல் பூங்காவை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்

கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதாக கருதி அமிர்தி உயிரியல் பூங்காவை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர் . தமிழகத்தில் கொரோனா 2 வது அலை தொற்று வேகமாக பரவியது . இதனால் முழு ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா தலங்கள், கோயில்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டது .

அதேபோல் வேலூர் அருகே உள்ள அமிர்தி சிறு மிருக வன உயிரியல் பூங்காவில் புள்ளிமான் , கடைமான் , முதலை , நரி , முள்ளம்பன்றி, மயில். கிளிகள், கழுகு மற்றும் நீர்ப்பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக அமிர்தி பூங்காவை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

Next Story
ai powered agriculture