வேலூர் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு

வேலூர் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு
X
வேலூர் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டது. சரக்கு வாங்க குவிந்த குடிமகன்கள்.

வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , திருவண்ணாமலை மாவட்டங்களில் 34 நாட்களுக்கு பிறகு இன்று 421 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது . இதையடுத்து , மதுபானங்களை வாங்க குடிமகன்கள் அதிகாலை முதலே குவிந்தனர் . தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்தமாதம் 10 ம்தேதி தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது . இதையடுத்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் , ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது . இதில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் 14 ம் தேதி ( இன்று ) முதல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது .

அதன்படி வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் வேலூர் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 116 டாஸ் மாக் கடைகளும் , ராணிப் பேட்டை மாவட்டத்தில் 86 டாஸ்மாக் கடைகள் உள்ளன . திருவண்ணா மலை மாவட்டத்தில் 219 டாஸ்மாக் கடைகள் உள்ளன . 34 நாட்களுக்கு பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால், கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் களுக்கு , அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் . மேலும் கடை சூப்பர்வைசர்கள் மைக் மூலம் சமூக இடை வெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் ஒவ்வொரு கடைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . 34 நாட்களுக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது . இதையடுத்து , மது பானங்களை வாங்குவதற்கு குடிமகன்கள் அதிகாலை முதலே குவிந்தனர் . ஒரு சில இடங்களில் டாஸ்மாக் திறப்பதற்கு முன்பே குடி மகன்கள் காத்திருந்தனர்.

கொரோனா தடுப்பு விதி முறைகள் சரியாக பின் பற்றப்படுகிறதா ? என்று வேலூர் மண்டல மேலாளர் கீதாராணி ஆய்வு செய்தார் . ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ் மாக் கடையை எஸ்பி சிபி சக்கரவர்த்தி இன்று ஆய்வு செய்தார் . அப் போது டிஎஸ்பி சச்சிதானந்தம் உள்பட பலர் உடனிருந்தனர் .

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி