முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்

முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்
X

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன்  மரியாதை செலுத்தினார்

வேலூரில் நாட்டின் முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் கொண்டாடப்பட்டது.

நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது . சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்பி செல்வகுமார் , டிஆர்ஓ பார்த்தீபன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் .

நாட்டின் முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி கடந்த 1806 ம் ஆண்டு ஜூலை மாதம் 10 ம் தேதி நடந்தது . வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டத்தில் ஏராளமானோர் வீரமரணம் அடைந்தனர் . அதைத்தொடர்ந்து , நாடு முழுவதும் சுதந்திரத்திற்கான போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக வேலூர் மக்கான் சிக்னல் அருகே சிப்பாய் புரட்சி நினைவு தூண் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் ஜூலை 10 ம் தேதி வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி , 215வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தூண் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சுற்றிலும் உள்ள தடுப்பு வேலிகள் முழுவதும் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது . அதைத்தொடர்ந்து, கலெக்டர் குமாரவேல்பாண்டியன் , எஸ்பி செல்வ குமார் , டிஆர்ஓ பார்த்தீபன் , எம்எல்ஏ கார்த்திகேயன் , ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் ஆகியோர் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதில், அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரிகளின் தேசிய மாணவர் படையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
Weight Loss Tips In Tamil