டிசி வாங்கிய மாணவன் பிளஸ் 2 பாஸ்: தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
வேலூர் தொரப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. பொதுத்தேர்வு வெளியாவதற்கு முன்பாக பள்ளிகளில் டிசி வாங்கி சென்றவர்கள், இறந்தவர்கள் ஆகியோரின் விவரங்களை நீக்கம் செய்து தற்போதைய மாணவர்களின் பட்டியலை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டது .
ஆனால் கடந்த 19 ம்தேதி வெளி முடிவு வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் , டிசி வாங்கிச் சென்றவர்கள் பெயர்களும் இடம் பெற்றிருந்தது . தலைமை ஆசிரியர்கள் சரியான பட்டியல் வழங்காததே இந்த குளறுபடிக்கு காரணம் என அறிந்த அரசு தேர்வுத்துறை , மாவட்ட வாரியாக விவரங்களை சேரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது .
இந்நிலையில் வேலூர் தொரப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் டிசி வாங்கி சென்ற ஒரு மாணவன், தேர்ச்சி பெற்ற விவரம் தெரிய வந்தது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது . இதற்கிடையில் தலைமை ஆசிரியர் வீரமணி மீது பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார் . ஆனால் உயரதிகாரிகளை சந்தித்து அவர் தொரப்பாடி பள்ளி தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றினார் .
தற்போதைய குளறுபடி காரணமாக மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவுப்படி வீரமணி பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக சில தினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu