ஆட்டோ திருடி கைதானவர் வேலூர் சிறையில் திடீர் மரணம்

ஆட்டோ திருடி கைதானவர் வேலூர் சிறையில் திடீர் மரணம்
X
ஆட்டோ திருடிய வழக்கில் கைதான சென்னையை சேர்ந்தவர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

வேலூரில் வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்கள் திருடு போவது சம்பந்தமாக வேலூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆட்டோ திருட்டு கொள்ளை நடந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஆட்டோவை ஒருவர் திருடி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் பழையபேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது44) என்பதும், வேலூரில் ஆட்டோக்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து ரமேஷை குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் குடியாத்தத்தில் இருந்து வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் காவல்நிலையத்தில் சிறைத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!