வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கையில், வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடி துணை மின் நிலையங்களில் மின் சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வருகிற 15-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சத்துவாச்சாரி பேஸ் 1 முதல் 5 வரை, வள்ளலார், ரங்காபுரம் அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை காகிதப்பட்டறை, கலெக்டர் ஆபீஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல் தொரப்பாடி, சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், ஜெயில் குடியிருப்பு, டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம் விருப்பாச்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu