வேலூர் மற்றும் அணைக்கட்டு திமுக எம்எல்ஏக்கள் மிரட்டுவதாக பாமக புகார்
திமுக எம்எல்ஏக்கள் மிரட்டுவதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பாமகவினர்
வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்த புகாரில், வேலூர் மாநகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 25 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாமக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் அழைத்து வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டுகிறார்கள்.
குறிப்பாக 24வது வார்டு நிறுத்தப்பட்டுள்ள பாமக வேட்பாளர் பரசுராமனை வரவழைத்து 24வது வார்டு தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தொழில் செய்து விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் இரண்டு நாள் டைம் கொடுக்கிறேன் அதற்குள் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா பெற்றுக்கொண்டு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.
இப்புகார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இலவழகன்,
வேலூர் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுகவினர் அச்சுறுத்தி மிரட்டி வேட்பு மனுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மிரட்டுகின்றனர். இதனால் பாமகவினர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக பாமகவினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்கச் சென்றபோது ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், திமுகவினர் வந்தால் அனைவரையும் உள்ளே விடுகிறீர்கள் நாங்கள் வந்தால் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டுமா என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி பாமகவினர் பத்துக்கும் மேற்பட்ட உள்ளே நுழைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu