வேலூர் பென்னாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

வேலூர் பென்னாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
X

மாதிரி படம் 

வேலூர் பென்னாத்தூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் சப்ளையை சரி செய்ய முயன்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

வேலூரை அடுத்த பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் மின்தடை ஏற்படும் பொழுது, மின்சாரம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சரி செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். காலை அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் வேல்முருகனிடம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து வேல்முருகன் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் சப்ளையை சரி செய்ய முயன்றார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் இருந்து வேல்முருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare