தன்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுவிக்க கோரி நளினி மனு

தன்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுவிக்க கோரி நளினி மனு
X

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி

வேலூர் மத்திய சிறையில் இருந்து தன்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுவிக்க கோரி உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவுக்கு நளினி மனு

வேலூர் மத்திய சிறையில் இருந்து என்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுவிக்க கோரி "உங்கள் தொகுதியில் முதல்வர்" பிரிவுக்கு நளினி மனு அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக இந்த வாரம் நளினியின் தாயார் முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் வழக்கறிஞர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்

முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில்.

தனக்கும் கணவர் முருகனுக்கும் ஒரு மாதம் பரோல் வழங்க கோரி ஏற்கனவே நளினி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த மாதம் 29-ம் தேதி மனு அளித்திருந்தார். அதை தொடர்ந்து இன்று "உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவுக்கு" சிறைதுறை மூலம் மனு அனுப்பியுள்ளார். அதில், தன்னையும் கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுதலை செய்ய வேண்டும், விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி 2 .1/2 ஆண்டுகள் ஆகிய நிலையில் அது குடியரசு தலைவருக்கும் அனுப்பட்டுள்ளது. இந்நிலையில் "தன்னை பிரிவு 40 தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின் படி, தொடர்விடுப்பில் நீண்ட பரோலில் தன்னையும் தனது கணவர் முருகனையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பாக நளினியின் தாயார் பத்மா அவர்கள் இந்த வாரத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த உள்ளார் என வழக்கறிஞர் புகழேந்தி கூறினார். மேலும் முருகனும்-நளினியும் இலங்கையில் உள்ள முருகனின் தாயிடமும், லண்டனில் உள்ள அக்காவிடவும் வீடியோ காலில் 10நாட்களுக்கு ஒருமுறை 10 நிமிடம் பேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இது தொடர்பாக சிறை துறை மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவை அனுப்பியுள்ளோம். வரும் 19-ம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வர இருக்கிறது. அதற்குள் இவர்களை பேச அனுமதித்துவிட்டு, பேசியது தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் இதனை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எற வழக்கறிஞர் புகழேந்தி பேட்டியில் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி