வேலூர் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

வேலூர் மருத்துவமனையில்  பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
X

பேரறிவாளன்

வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் இன்று பேரறிவாளனுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென முதல்வர்.ஸ்டாலினிடம் அவரது தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். அதன்பேரில், கடந்த மே மாதம் 28-ந்தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, பரோலை நீட்டிக்கக்கோரி அற்புதம்மாள் மனு அளித்ததைத் தொடர்ந்து 5-வது முறையாக பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

மூட்டு வலி மற்றும் சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை பேரறிவாளனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து மூட்டுவலி மற்றும் சிறுநீரக பிரச்சினை தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story