பொதுமக்கள் உயிரோடு விளையாடும் கார்பைடு கல் மூலம் பழுத்த மாம்பழங்கள்
வேலூர் மாவட்டத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் மார்க்கெட் மற்றும் மண்டிகளில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகனங்கள் மூலமும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் சுவை இருக்காது. இதை சாப்பிட்டால் முதலில் வயிற்று வலியும் , தொடர்ந்து வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படும். மேலும் புற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது . இதை ஆய்வு செய்ய வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் . எனவே இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் , உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது .
கண்டுபிடிப்பது எப்படி ?
கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை மக்கள் எளிதில் கண்டு பிடித்து விடலாம் . மாம்பழங்களின் மீது கறுப்பு புள்ளிகள் இருக்கும் . மாம்பழங்களை தொட்டு பார்த்தால் சூடாக இருக்கும் . தோல் மட்டும் பழுத்ததுபோல மஞ்சள் நிறமாக இருக்கும். உள்ளே வெட்டி பார்த்தால் பழுத்திருக்காது . சுவையும் இருக்காது . இந்த மாம்பழங்கள் ஒருசில நாட்களில் கெட்டு போய்விடும்.
இயற்கையாக பழுத்த பழங்களில் கடைசியாகத் தான் காம்புப்பகுதி பழுக்கும். கல் வைத்து பழுத்த பழம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருக்கும். எத்திலின் திரவத்தை பயன்படுத்தி புகை மூட்டம் போட்டு மாங்காய்களை பழுக்க வைத்த வியாபாரிகளுக்கு, இப்பொழுது பொறுமை இல்லை என்பதால் எத்திலின் திரவத்தை, மாங்காய்களில் தெளித்து அவைகளை பழுக்க வைக்கும் முறையை இந்திய உணவு பாதுகாப்புதுறை அனுமதித்துள்ளது .
அதாவது மாமரத்தில் சுரக்கும் எத்திலின் என்ற ஹார்மோன் மூலம்தான் மாம்பழங்கள் மரத்தில் இயற்கையாக பழுக்கின்றன . எனவே, அதே எத்திலின் திரவத்தை மாங்காய்களில் தெளித்து அவற்றை செயற்கையாக பழுக்க வைக்கும் முறை இது . இந்த முறைப்படி 1 லிட்டர்தண்ணீருக்கு 1 மி.லி.எத்திலின் திரவத்தை கலந்து அதனை மாங்காய்கள் மீது தெளித்து , அறையில் வைத்து பூட்டி வைக்கப்படும் . ஆனால் , இந்த முறையில் மாம்பழங்கள் பழுக்க 4 நாட்கள் வரை ஆகும் . இந்த முறையில் மாங்காய்களின் நிறம் மாறுவதுடன் , சுவை அப்படியே இருக்கும். உடல் நலத்திற்கு எந்த தீங்கையும் விளைவிக்காது . இவ்வாறு பழுக்கவைக்க நான்கு நாட்கள் வரை ஆகும் என்பதால், சில வியாபாரிகள் இதை பின்பற்றுவதில்லை .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu