எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி மனு

எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி மனு
X

பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ள காதல் தம்பதிகள்

குடும்பத்தினரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் தம்பதி மனு அளித்துள்ளனர்

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று சென்னையைச் சேர்ந்த உபஸ்னா , அவரது காதல் கணவர் மோகித் தாதர் என்பவருடன் வந்து மனு அளித்தார் . அந்த மனுவில் கூறியிருப்பதாவது : சென்னை சவுக்கார் பேட்டையைச் சேர்ந்த உபஸ்னா ( 23 ) ஆகிய நான் , கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் வீட்டின் அருகே வசிக்கும் மோகித் தாதர் என்பவரை காதலித்து வந்தேன் . எனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர் .

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம் . இதையறிந்த எனது பெற்றோர் என்னையும், கணவரையும் தாக்கினர். இதனால் அங்கிருந்து வந்து வேலூரில் உள்ள கணவரின் அண்ணன் வீட்டில் தங்கி உள்ளோம் . எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதால், எங்களை காப்பாற்ற வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags

Next Story
Weight Loss Tips In Tamil