பேரணாம்பட்டு அருகே டூ வீலர் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி : போலீசார் விசாரணை

பேரணாம்பட்டு அருகே  டூ வீலர் மீது  லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி : போலீசார் விசாரணை
X

விபத்தில் இறந்து போன குடும்பம் (பழைய படம்)

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்து போனார்கள்.

பேரணாம்பட்டு அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மரபண்டா பகுதியைச் சேர்ந்த ராஜா (35) என்பவர் சைனகுண்டா பகுதியில் கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகிறார். இன்று தனது சொந்த ஊரான பாஸ்மரபண்டா கிராமத்துக்கு தனது மனைவி காமாட்சி (28)மகன்களான சரண் (6)மற்றும் விண்னரசன் (4)ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பெங்களூரிலிருந்து மைதா லோடுடன் சென்னைக்கு வந்த லாரி பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜா மற்றும் அவரது மனைவி காமாட்சி மற்றும் மகன் விண்ணரசு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். படுகாயங்களுடன் பேரணாம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சரண் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் 4 பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் லாரி ஓட்டுனர் முருகன் என்பவரை கைது செய்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!