தனியார் ஆக்ரமித்த பூங்கா நிலத்தை மீட்ட பொதுமக்கள்

தனியார் ஆக்ரமித்த பூங்கா நிலத்தை மீட்ட பொதுமக்கள்
X
வேலூர் அலமேலு மங்காபுரம் எம்.ஜி.பி. நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் ஆக்ரமித்த 86 சென்ட் பூங்கா நிலத்தை பொதுமக்கள் மீட்டனர்

வேலூர் அலமேலு மங்காபுரம் எம்.ஜி.பி. நகர் குடியிருப்பு பகுதியில் 86 சென்ட் பூங்கா நிலம் உள்ளது. இதனை நீண்ட நாட்களாக தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வருகிறார். தற்போது அந்த இடத்தில் கட்டடம் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பூங்கா நிலத்தில் ஆக்கிரமித்து கொட்டப்பட்டிருந்த மணலை பொக்லைன் எந்திரம் வரவழைத்து அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பூங்கா நிலத்தை மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி