திருவலம் அருகே டாஸ்மாக் கடை சுவரை உடைத்து மதுபானம் திருட்டு
திருவலம் அருகே டாஸ்மாக் கடை சுவரை உடைத்து மதுபானம் திருட்டு
வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த கசம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது . இந்த கடையின் சூப்பர்வைசராக அன்னங்குடி கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கம், சேல்ஸ்மேன்களாக சேர்க்காடு கிராமத்தை சேர்ந்த தணிகாசலம் ஏரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, வேலூர் புலிமேட்டை சேர்ந்த முருகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் திருவலம் சிறப்பு எஸ்ஐ பாஸ்கரன், காவலர் முருகேசன், ஊர்க்காவல்படை மூர்த்தி ஆகியோர் இன்று அதிகாலை 2 மணியளவில் கசம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையின் அருகே உள்ள புதர்களில் மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டனர் . இதனால் சந்தேகமடைந்த போலீசார், கடையின் பின்புறம் சென்றுபார்த்தனர். அப்போது கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருந்தது .
இதையடுத்து சூபர்வைசர் மற்றும் சேல்ஸ்மேன்களை வரவழைத்த போலீசார், கடையை திறந்து பார்த்தனர். அப்போது, 1 லட்சம் மதிப்பிலான மொத்தம் 36 பெட்டிகளில் இருந்த மதுபானங்கள் திருட்டு போனது தெரிய வந்தது. உடனே கடையின் சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் ஆய்வு செய்தனர் . அப்போது வனப்பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் ஏரிப்பகுதிகளில் ஆங்காங்கே மது பான பெட்டிகள், மதுபான பாட்டில்கள் வீசப்பட்டிருந்தது . அவற்றை போலீசார் கைப்பற்றினர் .
சுவரை துளைபோட்டு உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் மதுபான பெட்டிகளை திருடி அதனை கொண்டு செல்லாமல் ஆங்காங்கே பதுக்கி வைத்த்துவிட்டு பிறகு எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து திருவலம் துணை ஆய்வாளர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .
கடந்த மாதம் ஏப்ரல் 19 ம்தேதியும் இதே கடையில் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் 1 லட்சம் மதிப்பிலான உயர்ரக மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். மேலும் கேமராவை உடைத்து விட்டு, டிஸ்க்கை திருடிச் சென்றுள்ளனர் . அந்த திருட்டு வழக்கில் மர்ம ஆசாமிகள் பிடிபடாத நிலையில் மீண்டும் திருட்டு நடந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu