கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைக்கப்படும்: வேலூர் திமுக வேட்பாளர் வாக்குறுதி

கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைக்கப்படும்: வேலூர் திமுக வேட்பாளர் வாக்குறுதி
X
கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைத்து உபரி நீர் வெளியேற்றப்படும் என 12-வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் வாக்குறுதி

வேலூர் மாநகராட்சி 12-வது வார்டில் மதிநகர், சத்யா நகர், அருப்புமேடு, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு திமுக சார்பில் சரவணன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள்:

அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து வீட்டுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும். படித்த இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். நவீன வசதிகள் கொண்ட உடற்பயிற்சி மையம் அமைக்கப்படும்.

ஏரிக்கரைகள் மீது பூங்கா அமைக்கப்படும். மழைகாலங்களில் கழிஞ்சூர் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஊருக்குள் நுழையாதவாறு காங்கிரீட் கால்வாய் அமைத்து மழைநீர் வெளியேற்றப்படும் என தனது தேர்தல் வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!