வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க கோரிக்கை

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க கோரிக்கை
X
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் , புதிய அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு என்று பல்வேறு பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது . அதேபோல் வேலூர் மாநகராட்சியில் ரூபாய்1,000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் , ஸ்மார்ட் பஸ் நிலையம் , ஸ்மார்ட் பார்க்கிங் , ஸ்மார்ட் சாலை , பாதாள சாக்கடை திட்டம் , கோட்டையை அழகுபடுத்தி ஒலி , ஒளி பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . இதில் ஸ்மார்ட் சாலை , ஸ்மார்ட் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டது .

அதே போல் சாலையோரங்களில் உள்ள மரங்களினால் தங்களது கடைகளுக்கு இடையூறாக உள்ளது என்று தனிநபர்கள் ஆங்காங்கே உள்ள புளிய மரங்களையும் வெட்டி அகற்றும் சம்பவங்கள் நடக்கிறது . இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

எனவே மத்திய அரசின் ரூபாய்1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்படும் வேலூர் மாநகராட்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக , ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க மாவட்ட நிர்வாகமும் , மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மாநகராட்சி பகுதிகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அரசு இடங்களில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!