வேலூர் பெருமுகையில் அரசு மணல் குவாரி செயல்படத் தொடங்கியது
கோப்புப்படம்
வேலூர் பெருமுகையில் செயல்படத் தொடங்கிய அரசு மணல் குவாரியை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் லெனின் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து பாலாற்றில் இருந்து டிராக்டர்கள், லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு, அவை பெருமுகையில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் மணல் விற்பனை இன்று தொடங்கியது.
மணல் குவாரியில் ஒரு யூனிட் மணல் ரூ.3,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குவாரியில் தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களுக்கும், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்களுக்கும் மணல் வழங்கப்படும். பொதுமக்களுக்கு மணல் தேவைப்பட்டால் இசேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டிடம் தொடர்பான வரைப்படத்தை இணைக்க வேண்டும்.
மேலும் மணல் எடுத்து செல்லும் வாகனத்தின் எண்ணையும் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். மணல் வழங்கும் நாளில் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதனை காண்பித்து மணலை பெற்றுக்கொள்ளலாம். லாரி டிராக்டர் போன்றவற்றின் மூலம் லாரி மணல் விற்பனை செய்யப்படுகிறது.
மாட்டு வண்டிகளுக்கு 10 சதவீதம் மட்டுமே மணல் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் வரிசை அடிப்படையில் மணல் சப்ளை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu