ஆபாச வீடியோவை காட்டி பணம்கேட்டு மிரட்டும் வடமாநில இளம்பெண் மீது போலீசில் புகார்

ஆபாச வீடியோவை காட்டி பணம்கேட்டு மிரட்டும் வடமாநில இளம்பெண் மீது போலீசில் புகார்
X
முகநூலில் அறிமுகமான வடமாநில இளம்பெண் ஆபாச வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டல். போலீசில் வாலிபர் புகார்

வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடந்த சிலவாரங்களுக்கு முன்பு முகநூலில் வடமாநில இளம்பெண் ஒருவர் நட்பு அழைப்பு விடுத்திருந்தார். இதைப்பார்த்த அந்த வாலிபர், அந்த பெண்ணின் அழகில் மயங்கி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு தனது முகநூல் நண்பர்களுள் ஒருவராய் மாற்றினார்.

இதையடுத்து அந்த பெண், வேலூர் வாலிபரிடம் மெசேஞ்சர் மூலமும் வாட்ஸ் அப்பிலும் சாட் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த பெண் காமமாக பேச, சபலத்தால் அந்த வாலிபரும் பேசி உள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் அந்தரங்க விஷயங்களை பரிமாறிக்கொண்டனர். அந்தபெண் தனது முகத்தை மறைத்து நிர்வாண வீடியோ அனுப்பி, வாலிபரிடம் அவருடைய அந்தரங்க வீடியோவை அனுப்புமாறு வற்புறுத்தி பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து அந்த பெண் பணம் கேட்டு வாலிபரை மிரட்ட தொடங்கினார். இதன் மூலம் அந்த பெண்ணின் சுயரூபம் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். அதைத்தொடர்ந்து அந்த பெண், வாலிபரின் முகநூல் நண்பர்கள் 5 பேருக்கு அவரின் அந்தரங்க வீடியோவை அனுப்பி உள்ளார். மேலும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த வீடியோவை அனுப்பி விடுவேன் என்று கூறி பணம் கொடுக்குமாறு மிரட்டினார். பணம் கொடுத்தாலும் மேலும் பணம் கேட்டு அந்த பெண் மிரட்டல் விடுக்க வாய்ப்புள்ளதாலும், அந்த பெண்ணுக்கு பின்னால் பணம் பறிக்கும் மர்மகும்பல் இருக்கலாம் என்று கருதியதாலும் அந்த வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்போது அந்த பெண், நீ எனக்கு ஆபாசவீடியோ அனுப்பி உள்ளாய். நானும் உன்மீது போலீசில் புகார் அளிப்பேன் என்று மிரட்டி உள்ளார்.அதனால் பயந்துபோன அந்த வாலிபர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story