வேலூரில் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க விவசாயிகள் போராட்டம்

வேலூரில் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க  விவசாயிகள் போராட்டம்
X

தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழக அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருவாய் கிராமங்கள் தோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி வேலூர் ஓட்டேரியில் உள்ள தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழக அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். நெல் உற்பத்தி செலவு உரம் இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி நடப்பு பருவத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare