பொய்கை மாட்டு சந்தையில் மாடுகள் அதிகளவில் வந்தும் விற்பனை மந்தம்
X
பொய்கை மாட்டு சந்தை
By - M. Sanjay Kumar Reporter |31 Aug 2021 9:34 PM IST
வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் மாடுகள் அதிகளவில் வந்தும் விற்பனை மந்தமாக இருந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்
பொய்கை மாட்டுச்சந்தையில் இந்த வாரம் வழக்கத்தை விட மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது . ஆனால் பெரும்பாலான வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் விற்பனை மந்தமாக இருந்தது
இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் , வியாபாரிகளிடம் கேட்டபோது, இந்த வாரம் கால்நடை சந்தைக்கு 70 சதவீதம் கால் நடைகள் வந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவிலான கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலை வரும் வாரங்களில் மாறும் என எதிர்பார்க்கிறோம் என்றனர் .
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu