வேலூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு

வேலூர்  கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு
X

கூட்டுறவு இணை இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநர்  அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 

வேலூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை. கணக்கில் வராத ரூ.2. 45 லட்சம் பணம் பறிமுதல்

வேலூர் அண்ணாசாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி மாடியின் மேல் கூட்டுறவு இணை இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநர் ரேணுகாம்பாளின் அலுவலகம் உள்ளது.

அங்கு அதிக அளவில் லஞ்சப்பணம் புழங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் ரஜினி,விஜய் ஆகியோர்கள் தலைமையில் அவர்கள் அங்கு திடீரென சோதனை செய்தனர். அப்போது ரேணுகாம்பாள் அலுவலகத்தில் பல இடங்களில் வைத்திருந்த ரூ.2 .45 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!