அதிமுக கூட்டணியில் இருந்து விலகல். பட்டாசு வெடித்து கொண்டாடிய தேமுதிகவினர்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அடுத்து வேலூரில். பட்டாசு வெடித்து கொண்டாடிய தேமுதிகவினர்.

தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கான தொகுதி பங்கீடு கூறித்து அ.தி.மு.க-தே.மு.தி.க இடையே தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது. இறுதி வரை தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாத நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அக்கட்சியினர், வேலூர் அண்ணாசலையில் உள்ள பழைய மாநகராட்சி எதிரில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு