வேலூர் மாநகராட்சியில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
வேலூர் மாநகராட்சி
வேலூர் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நிரந்தர தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஏற்கனவே மாவட்டத்தில் தினமும் 18 வயதுக்கு மேற்பட்ட 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 438 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது. இது மக்கள் தொகையில் 25.55 சதவீதமாகும். தற்போது மாவட்டத்தில் இருப்பில் 17,800 தடுப்பூசிகள் உள்ளன. இன்று கூடுதலாக 10,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரஉள்ளது.
எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நிரந்தர தடுப்பூசி முகாம்களாக வேலூர் மாநகராட்சியில் 4 முகாம்களும் , குடியாத்தம் நகராட்சியில் 3 முகாம்களும், பேரணாம்பட்டு நகராட்சியில் 1 முகாமும், அணைக்கட்டு, கே.வி.குப்பம் மற்றும் கணியம்பாடி வட்டாரத்தில் தலா ஒரு முகாமும் கீழ் கண்ட இடங்களில் நடைபெற உள்ளது .
அதன்படி வேலூர் மாநகராட்சியில் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி , ஜெயராம் செட்டித்தெரு அரிஹந்த் தடுப்பூசி மையம், காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மேல் நிலைப்பள்ளி, வேலூர் ஊரீசு கல்லூரி வளாகம் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.
அணைக்கட்டில் ராகவேந்திரா திருமண மண்டபம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கே.வி. குப்பத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி, குடியாத்தம் சந்தப் பேட்டை நகராட்சி சமுதாயக்கூடம், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, பேரணாம்பட்டு நகராட்சியில் இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி ஆகிய 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இதுதவிர அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் ஜிபிஎச் மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்கள் அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu