வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நினைவுத் தூண் அருகே உள்ள கழிவறையில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
பழைய பேருந்து நிலையத்தில் பர்மா பஜார் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த போர்டுகளை அப்புறப்படுத்தக் கூறினார். முன்னதாக அண்ணா கலையரங்கம் மற்றும் டவுன்ஹால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பாலாற்றங்கரையில் உள்ள முத்து மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காட்பாடி ஹரிகந்த் நகரில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
காட்பாடி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட கார் லாரி உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்ட கலெக்டர் உடனடியாக அனைத்தையும் விட உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu