கணியம்பாடி அருகே கிராமசபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

கணியம்பாடி அருகே கிராமசபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
X

சாத்துமதுரையில் நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 245 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கணியம்பாடி ஒன்றியம் சாத்துமதுரை கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில்; சாத்துமதுரை கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு வீடுகள் இல்லை என்ற நிலைமை இருக்கக்கூடாது. அரசு பள்ளிகளுக்கு தேவையான திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து பொதுமக்கள் பஸ் வசதி வேண்டும் சாத்துமதுரை கிராமத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ஆர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா கமல் பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், பானுமதி, ஒன்றிய செயலாளர் கலைச் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன், ஊராட்சி செயலாளர் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture