விரிஞ்சிபுரம்- வடுகன்தாங்கல் ரெயில்வே மேம்பாலம் திறப்பு
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேம்பாலத்தில் கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
வேலூர் வடுகன்தாங்கல் விரிஞ்சிபுரம் ரெயில்வே மேம்பாலம் ரூ.29.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேம்பாலத்தில் கொடியசைத்து வாகனப் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த ரெயில்வே மேம்பாலம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
விரிஞ்சிபுரம் வடுகன்தாங்கல் இடையே பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் இந்த பாலம் வசதியாக அமைந்து உள்ளது. மேலும் வடுகன்தாங்கல், லத்தேரி, பனமடங்கி பகுதிகளில் இருந்து வேலூர் அணைக்கட்டு பகுதிகளுக்கு விரைந்து செல்ல முடியும்.
பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காக இந்த வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல லத்தேரி மற்றும் கரசமங்கலம் பகுதியிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu