வேலூரில் நாம் தமிழர், திமுகவினரிடையே மோதல்

வேலூரில் நாம் தமிழர், திமுகவினரிடையே மோதல்
X

திமுகவினரால் தாக்கப்படும் நாம் தமிழர் நிர்வாகி 

வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல்

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பிரதான கட்சிகள் இன்று கூட்டம் கூட்டமாக வந்து வேட்புமனு தாக்கலில் ஈடுபட்டனர்

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். தேர்தல் விதிமுறையின்படி வேட்புமனு தாக்கல் செய்ய 3 நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வழக்கம். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் 5 பேருக்கு மேலாக உள்ளே சென்றதாக கூறப்படுகிறது

இதை அனுமதிக்காத காவல்துறையினர் அதே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுகவினரை அதிக அளவில் உள்ளே அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதனை நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகி சங்கர் என்பவர் இதுகுறித்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகி சங்கரை சரமாரியாக தாக்கினர் இதனால் லேசான காயம் அடைந்த சங்கர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!