மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்த அணைகட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.

X
அணைகட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏவாக உள்ள தி.மு.கவை சேர்ந்த ஏ.பி.நந்தகுமார் மீண்டும் அதே தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தொகுதியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர் இன்று அணைகட்டு தொகுதிக்குட்பட்ட விரிஞ்சிபுரம் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது வேட்பாளரை வரவேற்க மேளம் அடிக்கப்பட்டு பொது மக்கள் நடனமாடி வந்தனர்.

இதனை கண்ட வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் வேனில் இருந்து இறங்கி பொது மக்களுடன் ஒன்றாக சேர்ந்து நடனமாடினார். பின்னர் தனக்கு வாக்களிக்கும் படி பொது மக்களை கேட்டுக்கொண்டார். எதிர்பாராத விதமாக வேட்பாளர் பொது மக்களிடம் நடனமாடியது அங்குள்ளவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!