வேலூர் அருகே பிரிட்டிஷ் ஆட்சி கால 18ம் நூற்றாண்டு பீரங்கி கண்டுபிடிப்பு

வேலூர் அருகே பிரிட்டிஷ் ஆட்சி கால 18ம் நூற்றாண்டு பீரங்கி கண்டுபிடிப்பு
X

18ம் நூற்றாண்டு பீரங்கி 

வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சி கால பதினெட்டாம் நூற்றாண்டு பீரங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் அருகே உள்ள மலையில் பதினெட்டாம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 9 அடி நீளமும் மூன்று அடி அகலமும் கொண்டபீரங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை மலை உச்சியில் மண்ணில் புதைந்திருந்த பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் நகரின் வட கிழக்கில் இருந்து தென்கிழக்காக செல்லும் மலைத்தொடரில் 5 மலைக்கோட்டைகள் அமைந்துள்ள ன. வேலூர் அருகே சார்பனாமேடு பகுதியை ஒட்டியுள்ள மலைமீது அப் பகுதியில் பெய்த மழையால் மண் அரிக்கப்பட்டு பூமியில் புதைந்திருந்த இரும்பு பீரங்கி வெளிப்பட்டிருப்பதை அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அப்பகுதி மக்கள் வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் இன்று நேரில் சென்று இரும்பு பீரங்கியை ஆய்வு செய்தார்.

அப்போது அந்த பீரங்கி பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என்றும் பிரிட்டிஷார் ஆட்சியில் இந்த பீரங்கிகள் பயன்படுத்தப் பட்டதாகவும், வேலூர் அருகே உள்ள மலையில் இருந்து வேலூர் கோட்டையை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் இதுபோன்ற பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்ற பீரங்கிகள் ஏற்கனவே வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் ஐந்து பீரங்கிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பீரங்கி இரும்பால் ஆன 9 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டதாகும்.

இந்த பீரங்கி சுமார் 2 டன் எடை அளவு இருப்பதால் இதை கீழே எடுத்துவந்து பாதுகாப்பாக வைப்பதா? அல்லது அங்கேயே பாதுகாப்பாக வைப்பதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த பீரங்கியை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் நேரடியாகச் சென்று பார்த்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!