வேலூரில் 75 வது ஆண்டு சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள்

வேலூரில் 75 வது ஆண்டு சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள்
X
75ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின துவக்க விழாவை முன்னிட்டு வேலூரில் சிப்பாய் நினைவுத் தூணுக்கு மரியாதை செய்து பேரணியாக சென்ற ஆட்சியர் மற்றும் மாணவர்கள். சுதந்திரத்தை வெளிபடுத்தும் விதமாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்

வேலூரில் மத்திய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்தியா சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டை முன்னிட்டு கொண்டாட்டங்கள் துவக்க விழா இன்று நடைபெற்றது. வேலூர் மக்கான் பகுதியில் உள்ள வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்புபடை போன்றவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.


பின்னர் காகிதபட்டறையில் உள்ள தியாகி வீரய்யா வீட்டிற்கு சென்று அவரது மனைவிக்கு சால்வை அணிவித்து அவரின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சிப்பாய் நினைவுதூணிலிருந்து வேலூர் கோட்டைவரை பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.வேலூர் கோட்டையில், சுதந்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டமான சிப்பாய் புரட்சி 1806 ஆம் ஆண்டு ஜுலை பத்தாம் நாள் வேலூர் கோட்டையில் தான் துவங்கியது என்பதால் இங்கு சுதந்திர தின ஆண்டு விழா கொண்டாடப்படுவது சிறப்பாகும்.


Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி