கேரளாவில் இருந்து வேலூருக்கு ஆயுர்வேத மருந்து
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று தடுப்பு பணியில் மருத்துவ பணியாளர்கள், போலீசார், வருவாய்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களும் எதிர்பாராத விதமாக கொரோனாவினால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே முன்களப்பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி கேரள மாநிலத்தில் இருந்து ஆயுர்வேத மருந்து பெட்டகம் மினிலாரியில் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தன. 110 பெட்டியில் தலா 12 பெட்டகம் வீதம் 1,320 ஆயுர்வேத மருந்து பெட்டகம் உள்ளன. அவை கலெக்டர் அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டன. ஆயுர்வேத மருந்து பெட்டகம், முன்களப்பணியாளர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu