வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 111 தெருக்கள் தகரத்தால் அடைப்பு

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 111 தெருக்கள் தகரத்தால் அடைப்பு
X
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே தெருவில் மூவருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 111 தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டன

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் 2-வது அலையினால் ஏராளமான நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதித்த குடும்பத்தினரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்து பெட்டகம் வழங்குதல் மற்றும் அந்த பகுதியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை, கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் ஒரே தெருவில் 3 வீடுகளில் அல்லது ஒரேவீட்டில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த தெரு தகரத்தால் அடைக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 111 தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளன.

அங்கு தினமும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதனால் விரைவில் பல பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள தகரங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!