வேலூரில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

வேலூரில்  வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி
X

வேலூரில் கூடுதல் வாக்கு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி துவங்கியது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1783 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 2140 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2140 கட்டுப்பாட்டு கருவிகள், 2296 விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குடோனில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கூடுதலாக கொண்டு வரப்பட்ட 100 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 150 விவிபேட் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது. இந்த இயந்திரங்களில் முதற்கட்ட சரிபார்ப்பு பணியினை அனைத்து கட்சி பிரமுகர்கள் மத்தியில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் முன்னிலையில் இன்று தொடங்கியது. இந்த இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்த பின்னர் தேவைபடும் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil